வெற்றிக்குப் பின்னால்...

1980 களில் தங்க மங்கை பி.டி. உஷா, வலசம்மா, சைனி வில்சன்... போன்ற கேரள வீராங்கனைகள் தான் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தனர்.
அதே வரிசையில் தற்போது இடம்பிடித்து இருக்கிறார் கேரளாவில் பிறந்த அஞ்சுஜார்ஜ்!
சமீபத்தில் பாரீசில் நடந்த உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலம் வென்றார் அஞ்சுஜார்ஜ்! இதன் மூலம் உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை தட்டி உள்ளார்!
அஞ்சுவின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் இருப்பது அவரது கணவரும், பயிற்சியாளருமான பாபி ஜார்ஜ்!
2001-ல் 6.74 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் புதிய தேசிய சாதனை படைத்தார். 2002-ல் மான் செஸ்டர் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 6.49 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலம் வென்றார். அதே ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் தங்கம் வென்று பிரமிக்க வைத்தார்.
அஞ்சுவின் நீளம் தாண்டும் திறனை அதிகரிக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மைக்போவெலிடம் அழைத்து சென்றார் அவரது கணவர் ஜார்ஜ்! அஞ்சுவின் பயிற்சியாளரான மைக் போவெல் 1991-ல் டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன் பட்ட போட்டியில் 8.95 மீட்டர் தாண்டி உலக சாதனை படைத்தவர் என்பது விசேஷம்!
மைக் போவெலிடம் சில வார பயிற்சியிலேயே அஞ்சுவின் நீளம் தாண்டும் தூரம் அதிகரித்து இருக்கிறது.
இனி அஞ்சு ஜார்ஜ் சொல்கிறார்.
ஏதென்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி வரைக்கும் மைக்போவெலிடமே பயிற்சி பெற திட்டம் போட்டிருக்கேன். அவரிடம் இருந்து நீளம் தாண்டுவதில் உள்ள நிறைய டெக்னிக்கை கத்துக்கிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பே மைக்போவெலிடம் பயிற்சி பெற்றிருந்தால் உலக தடகள போட்டியில் ஈசியா தங்கம் வென்று இருப்பேன்!
நான் தொடர்ந்து வெற்றிகள் குவிப்பதற்கு என் கணவர் பாபி ஜார்ஜ்தான் காரணம்! அவர்தான் என்னை மைக் போவெலிடம் பயிற்சி பெற அழைத்து வந்தார். மைக்போவெல் யாருக்கும் அவ்வளவு எளிதில் பயிற்சி அளிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்.
அதனால் என் கணவர் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரர் மூலம் மைக்போவெல் பற்றி விசாரித்தார். அப்போது மைக்போவெல் கலிபோர்னியாவில் உடற்பயிற்சி பேராசிரியராக பணியாற்றுவது எங்களுக்கு தெரிந்தது.
உடனே என் கணவர் மைக்போவெலை நேரடியாக தொடர்பு கொண்டு என்னோட கடந்தகால வெற்றிகள் குறித்து சொன்னார். மேலும் எனது ஒலிம்பிக் லட்சியம் பற்றியும் விசாரித்தார். சற்று யோசித்த போவெல் இறுதியில் எனக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார்.
அப்போது நானும், கணவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
போவெலிடம் பயிற்சிபெற்ற பிறகு என்னால் நிச்சயமாய் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்துருக்கு! ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரைக்கும் நான் ஓயப் போவதில்லை என்றார் அஞ்சு ஜார்ஜ்!
உலக தடகள போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அஞ்சுஜார்ஜுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 25 லட்ச ரூபாயை பரிசாக வழங்கினார். இதற்கு முன்பும் அஞ்சுவுக்கு பல தடவை முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கி தொடர்ந்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்!
உலக தடகளத்தில் அபார சாதனை படைத்து வரும் தமிழக வீராங்கனை அஞ்சுஜார்ஜை நாமும் வாழ்த்துவோம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றிக்குப் பின்னால்..., போட்டியில், தங்கம், பயிற்சி, அஞ்சுவின், உள்ள, ஜார்ஜ், கணவர், தூரம், நடந்த, மீட்டர், தடகள, நீளம், மைக்போவெல், மைக், போவெலிடம், வெண்கலம், வென்று, தாண்டி, மூலம், சாதனை, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி