நஸி மின்யா(க்)

தேவையானவை: பாஸ்மதி அரிசி - 2 கப், தண்ணீர் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 8 பல், தேங்காய்ப்பால் - 2 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து, இரண்டாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, வெங்காயம், பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பட்டை, லவங்கம் ஆகியவற்றைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். நிறம் மாறி பச்சை வாசனை போக வதங்கியதும் தேங்காய்ப்பால், தண்ணீர், அரிசி சேர்த்து, தேவையான உப்புப் போட்டு, குக்கரை மூடி, அடுப்பில் வையுங்கள். 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்தும், 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பிரஷர் போனதும் குக்கரைத் திறந்தால் ‘பொலபொல’வென்ற ‘நஸி மின்யா(க்)’ ரெடி. சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் சம்பல் அல்லது குழம்புடன் பரிமாறலாம். அசைவப் பிரியர்கள், சிக்கன் கிரேவியுடன் சுவைக்கலாம். சூப்பராக இருக்கும் மலேசிய உணவு இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நஸி மின்யா(க்), மலேசியன் உணவுகள், Malaysian Recipes, , Recipies, சமையல் செய்முறை