சமையல் செய்முறை - தக்காளி துவரம்பருப்பு சூப்
எப்போதும் தக்காளி சூப்பை சாப்பிடுபவர்கள், இந்த வித்தியாசமான தக்காளி துவரம்பருப்பு சூப்பை செய்து சாப்பிடலாம். இதில் துவரம் பருப்பை சேர்ப்பதனால் உடம்பிற்கு நல்லதும் கூட.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
துவரம்பருப்பு - 1/4 ஆழாக்கு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க
தனியா - 1 கைப்பிடியளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை அரைத்து, தனியாக வையுங்கள்.
* பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
* தக்காளியை, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளுங்கள்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தைப் போட்டுத் தாளியுங்கள்.
* இதில் தக்காளி, வேக வைத்து மசித்த பருப்புடன், நான்கு தம்ளர் தண்ணீர் விட்டுக்கொதிக்க விடுங்கள்.
* கலவை நன்றாக கொதி வரும்போது, அரைத்த மசாலாக்களைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி துவரம்பருப்பு சூப் - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - தக்காளி, டீஸ்பூன், துவரம்பருப்பு, தேவையான