சமையல் செய்முறை - ஸ்டஃப்டு இட்லி
தேவையான பொருள்கள்:
அரிசி - 200 கிராம்
உளுந்து - 150 கிராம்
வெந்தயம் - 1 பிடி
கேரட், முட்டைகோஸ், வெள்ளரி - இரண்டு கப்
மிளகு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து இட்லி மாவு தயாரித்துக் கொள்ளுங்கள்.
* கேரட், முட்டைக் கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நீளவாக்கில் அரிந்து, அதில் உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். அதன் மேல் எலுமிச்சைப் சாறு பிழிந்து விடுங்கள்.
* இப்போது கரைத்து வைத்துள்ள இட்லி மாவை இட்லித் தட்டில் ஒரு லேயர் ஊற்றிக்கொண்டு, அதன் மேல் கலந்து வைத்திருக்கிற காய்கறிகளைப் போடுங்கள்.
* மீண்டும் ஒருமுறை காய்கறிகளின் மேல் மாவைக் கொஞ்சமாக ஊற்றி, வேகவைத்து எடுங்கள்.
ஸ்டஃப்டு இட்லி தயார்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்டஃப்டு இட்லி - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி -