சமையல் செய்முறை - அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா
நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். இதோ உங்களுக்கான செய்முறை.
தேவையான பொருள்கள்:
அன்னாசிப்பழச்சாறு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/2 கப்
முந்திரி - 7 பருப்புகள்,
திராட்சை - 6
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.
* அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.
* இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - சேர்த்துக், செய்முறை, கடலைமாவு