சமையல் செய்முறை - சாக்லேட் குக்கீஸ் பிஸ்கெட்
தேவையான பொருள்கள்:
மைதா மாவு - 250 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
பட்டர் க்ரீம் செய்ய:
அஸ்கா சர்க்கரைப்பொடி - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
எசன்ஸ்
- சில துளிகள் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்
செய்முறை:
* மைதாவை சலித்து வைக்கவும். முட்டையை அடித்துக் கொள்ளவும்.
* வெண்ணெய், சர்க்கரைப்பொடி இரண்டையும் நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.
* இதில் முட்டை 2 டீஸ்பூன் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
* இதோடு பால் பவுடர், மைதா மாவு, கொக்கோ பவுடர் மூன்றையும் கலந்து பிசைந்து கொள்ளவும்.
* முறுக்கு பிழியும் நாழியில் அகலமான வரி வடிவ பிஸ்கெட் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
* இதில் பிசைந்த மாவைப் போட்டு நெய் தடவிய டிரேயில் நீளமாக பிழிந்து கொள்ளவும்.
* ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
* ஆறிய பிறகு பட்டர் க்ரீமை இரண்டு பிஸ்கெட்டுகளுக்கு இடையில் வைத்து சாண்ட்விச் போல செய்து கொள்ளவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாக்லேட் குக்கீஸ் பிஸ்கெட் - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - கொள்ளவும், கிராம், பவுடர், வெண்ணெய், கலந்து