காலிஃப்ளவர் பக்கோடா
செய்முறை:
2 கப் கடலை மாவைச் சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு அங்குலம் இஞ்சியைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாதுளை விதையைத் தூளாக்கிக் கொள்ளவும். 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதையைச் சற்று கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடலை மாவுடன் தேவையான உப்புத்தூள், 2 தேக்கரண்டி மிளகாய்தூள், 1 சிட்டிகை சோடாமாவு, 2 மேஜைக்கரண்டி நெய், அரைத்த சீரகம், மாதுளை விதை தூள், அரைத்த இஞ்சி, கொத்தமல்லித் தழை, புதினா, கொத்தமல்லி விதை ஆகியவற்றைக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இக்கலவையை அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
1/2 கிலோ காலிஃப்ளவரை தண்டு நீக்கி, பூப் பூவாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் பூக்களைப் போட்டு ஒரு நிமிடத்தில் எடுத்து விடவும். இப்பூக்களைக் கடலைமாவுக் கலவையில் முக்கி எடுத்து, வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து, அதில் போட்டு நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலிஃப்ளவர் பக்கோடா, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கொள்ளவும், தேக்கரண்டி, Recipies, சமையல் செய்முறை