குட மிளகாய்ப் பச்சடி
தேவையான பொருள்கள்
குடமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 3
துவரம் பருப்பு - 100 கிராம்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 5 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
புளி - நெல்லிக் காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
துவரம் பருப்பைப் பாதி வேக்காடாக வேக வைக்கவும். குடமிளகாய், வெங்காயத்தைப் பொடியாகத் துண்டுகளாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்துக் கொண்டு, அதில் குடமிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கிக் கொண்டு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்த பிறகு, புளியைக் கரைத்த் ஊற்றவும். ஏற்கெனவே பாதியாக வேக வைத்த துவரம் பருப்பை அதில் போட்டு, நன்கு வேக வைக்கவும்.
எல்லாப் பொருள்களும் நன்றாக வெந்து, கெட்டியானதும், இறக்கி வைத்துக் கொள்ளவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குட மிளகாய்ப் பச்சடி, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, ஸ்பூன், வைக்கவும், பருப்பு, துவரம், குடமிளகாய், Recipies, சமையல் செய்முறை