சீரகச் சட்னி
தேவையான பொருட்கள்:
புளி - 2 எலுமிச்சை அளவு
சீரகம் - 25 கிராம்
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் - 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
2 எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 25 கிராம் சீரகத்தை வறுத்து இரண்டு மேஜைக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளி கரைத்த தண்ணீருடன் அரைத்த சீரகம், சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்புத் தூள் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் இதை கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். வாணலியில் சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி காய வைத்து இத்துடன் சேர்க்கவும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீரகச் சட்னி, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, அளவு, மேஜைக்கரண்டி, தேவையான, கொள்ளவும், வைத்து, Recipies, சமையல் செய்முறை