கோதுமை மசாலா கேக்

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 250 கிராம்
டால்டா - 125 கிராம்
சக்கரைப் பவுடர் - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பொடித்தது - 11/2 டீஸ்பூன்
கொத்துமல்லி பொடித்தது - 1 1/2 டீஸ்பூன்
புதினா பொடித்தது - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் கலந்து சலித்துக் கொள்ள வேண்டும். டால்டாவை நன்றாக அடித்து அதில் சக்கரையைச் சேர்த்து நன்றாக நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும்.
டால்டாவோடு கோதுமைக் கலவையைச் சேர்த்து பிசைந்து அடித்துக் கலவை செய்து கொண்டு மற்ற பொருள்களையும் சேர்த்துப் பிசைந்து கலவை செய்ய வேண்டும்.
தகர ட்ரேயில் டால்டா தடவி, கலவையை அதில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். இளந்தீயில் ஒரு மணி நேரத்தில் வெந்து விடும். வெந்த பின் இறக்கி ஆற வைக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோதுமை மசாலா கேக், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, டீஸ்பூன், வேண்டும், பொடித்தது, கிராம், பவுடர், Recipies, சமையல் செய்முறை