அத்திப்பழ காரப்புட்டு
தேவையான பொருட்கள்:-
அத்திப்பழம் - ஒரு கப் (நறுக்கின துண்டுகள்)
கடலைப்பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான
செய்முறை விளக்கம்:-
எல்லா பழக்கடைகளிலும் ஃபிரெஷ் அத்திப்பழம் கிடைக்கும். பழத்தை சின்னத் துண்டுகளா நறுக்கிக்குங்க. ஒரு கப் கடலைப் பருப்புக்கு ஒரு கப் அத்திப்பழத் துண்டு தேவைப்படும். கடலைப் பருப்பை ஊற வெச்சு, அதோட ரெண்டு பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து மசால் வடைக்கு அரைக்கிற மாதிரி கொர கொரப்பா அரைச்சுக்கணும். வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு (விருப்பமானால் மட்டும்) தாளிச்சு, ஒரு கொத்து கறிவேப்பிலை போடுங்க அப்புறமா கடலைப் பருப்பு கலவையைப் போட்டு கிளறணும். அடுப்பு மெல்லிசா, தணலா எரியட்டும். கடலைப் பருப்பு நல்லா வெந்து கமகமனு வாசனை வர்ற அளவு கிளறுங்க. மாவு அடிப்பிடிச்சுடாம பாத்துக்குங்க. உசிலி மாதிரி பொலபொலனு வந்ததும். அத்திப்பழத்தைப் போட்டு அஞ்சு நிமிஷம் புரட்டி இறக்கினா, புட்டு தயார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்திப்பழ காரப்புட்டு, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கடலைப், தேவையான, Recipies, சமையல் செய்முறை