தேங்காய்ப்பால் குழம்பு
தேவையானவை:
தேங்காய் - 1
கத்தரிக்காய் - 100 கிராம்
பட்டை - 1
லவங்கம் - 1
ஏலக்காய் - 1
பீர்க்கங்காய் - 100 கிராம்
உருளைக் கிழங்கு - 200 கிராம்
மிளகாய் - 4
பூண்டு - 5
மல்லி, சீரகம் - 2 தேக்கரண்டி (அரைக்கவும்)
எண்ணெய் - அரை குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தேங்காயைத் துருவிக் கெட்டியாக முதல் பால் எடுக்கவும், பிறகு இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், அரைத்து வைத்த மல்லி, சீரகம் கலக்கவும்.
பிறகு காய்கறிகளை நறுக்கிப் போட்டு இந்தக் கலவையில் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
இது நன்றாக வெந்த பிறகு முதல் பாலைச் சேர்த்து மஞ்சள் பொடி தூவ வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டுத் தாளித்து இதில் சேர்க்கவும்.
பிறகு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும், சூடான சுவையான தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய்ப்பால் குழம்பு, 65 வகையான உணவுகள், 65 Type Recipes, பிறகு, கிராம், Recipies, சமையல் செய்முறை