உறுளைக்கிழங்கு வறுவல்.
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால்டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையானஅளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை, சிறு சதுரத்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். கொதிக்கிறவெந்நீரில் போட்டு, உடனே எடுத்துவிடுங்கள். அதில் கார்ன்ஃப்ளார், மிளகாய்தூள், உப்பு,அரிசிமாவு ஆகியவற்றைப் போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசறிக்கொள்ளுங்கள். வாசனைபிடிக்கும் என்றால், சிறிது சோம்புத்தூள் சேர்த்துப் பிசறலாம். பிறகு, எண்ணெயைக் காயவைத்துபிசறிவைத்த கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். பொரித்து வைத்தநிமிடத்தில் ‘பொசுக்’கெனக் காலியாகிவிடும் பாருங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உறுளைக்கிழங்கு வறுவல்., 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை