சேப்பங்கிழங்கு வறுவல்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, அரிசிமாவு - கால் டீஸ்பூன், கடலைமாவு - கால்டீஸ்பூன், ரஸ்க் தூள் - 100 கிராம், உப்பு - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து, குழைந்துவிடாமல் வேகவைத்துஎடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் தோல் நீக்கி, வில்லை வில்லையாக நறுக்கிக்கொள்ளுங்கள்.பிறகு, அதில் உப்பு, அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்தூள் போட்டு, லேசாகத் தண்ணீர் (ஒருடீஸ்பூன் போதும்) தெளித்துப் பிசறி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து,பிசறின கிழங்கை ரஸ்க் தூளில் புரட்டியெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.வெளியே மொறுமொறுவெனவும் உள்ளே பஞ்சு போலவும் சுவையூட்டும் இந்த வறுவல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேப்பங்கிழங்கு வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை