அவரைக்காய்-வரமிளகாய் வறுவல்
தேவையானவை: பிஞ்சு அவரைக்காய் - கால் கிலோ, வரமிளகாய் - 7, சின்ன வெங்காயம் - 7,கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: அவரைக்காயை மிகவும் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் மீடியமாகநறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். வரமிளகாயைக் கிள்ளிவையுங்கள்.கடாயில் எல்லா எண்ணெயையும் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் போட்டுகருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். அதோடு வெங்காயம் போட்டு வதக்கி, அவரைக்காயையும்போட்டு வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி, ‘ஸிம்’மில் வைத்து,கடாயை மூடுங்கள். அந்த எண்ணெயிலேயே அவரைக்காய் வேகவேண்டும். அவ்வப்போது திறந்து,கிளறிவிட்டு, திரும்ப மூடிவைத்து வேகவிடுங்கள். வேர்த்து வேர்த்து காய் வெந்துவிடும்.அப்படியே, அந்த எண்ணெயோடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவரைக்காய்-வரமிளகாய் வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, , Recipies, சமையல் செய்முறை