பலாக்காய் கோளா உருண்டை
தேவையானவை: பலாக்காய் - கால் பகுதி, உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையானஅளவு, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் வதக்கி அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல்,பச்சை மிளகாய் - 4, பட்டை, லவங்கம் - தலா 2, சின்ன வெங்காயம் - 6, மல்லித்தழை - ஒருகைப்பிடி .
செய்முறை: பலாக்காயைப் பெரிய துண்டுகளாக வெட்டி, வேகவிடுங்கள். வெந்ததும் நீரைவடித்துவிட்டு, பலாக்காய் துண்டுகளை எடுத்துப் பிழிந்து, அம்மியில் நசுக்கி அல்லது மிக்ஸியில்அடித்து பூவாக உதிர்த்துக்கொள்ளுங்கள். வதக்கி அரைக்க வேண்டியதை தண்ணீர் இல்லாமல்அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலையைப் பொடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் உதிர்த்தபலாக்காய், அரைத்த கலவை, உப்பு, பொட்டுக்கடலைப் பொடி.. எல்லாவற்றையும் போட்டுப்பிசைந்து வையுங்கள். பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில்பொரித்தெடுங்கள். குறிப்பு: கலவை உருட்ட வரவில்லை என்றால், இன்னும் சிறிதளவுபொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பலாக்காய் கோளா உருண்டை, 30 வகையான வறுவல், 30 Type Varuval, , Recipies, சமையல் செய்முறை