முள்ளங்கி சாப்ஸ்
தேவையானவை: பிஞ்சு முள்ளங்கி - கால் கிலோ, கடலைப்பருப்பு - அரை கப், வரமிளகாய் - 10,சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 6 பல், சின்ன வெங்காயம் - 10, பொடியாக நறுக்கியமல்லித்தழை, உப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கியை துருவி, நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளுங்கள். கடலைப்பருப்பைஊறவிட்டு, வரமிளகாய், சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள்.பிழிந்த முள்ளங்கையை, அரைத்த பருப்புக் கலவையுடன் பிசறி, மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து,சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவிட்டு அள்ளுங்கள். ‘சூப்பரோசூப்பர்’ என்று கொண்டாடுவார்கள் இந்த சாப்ஸை சாப்பிட்டவர்கள் எல்லாம்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முள்ளங்கி சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, , Recipies, சமையல் செய்முறை