வாழைக்காய் சாப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் - 2, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் - ஒரு துளி, கறிவேப்பிலை - 10 இலை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை குண்டு, குண்டாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து, இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி தண்ணீரை வடியுங்கள். தண்ணீர் நன்குவடிந்ததும், எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயைப் போட்டுப் பொரித்தெடுங்கள். ஒருகடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு கொதித்ததும் தீயைக் குறைத்துவைத்து, மிளகு,சீரகத்தூள் போட்டு, உப்பையும் சேர்த்து, பொரித்த வாழைக்காய் துண்டுகளையும் போட்டு 2டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, அதிகமான தீயில் கிளறுங்கள். உதிர் உதிராக வந்ததும் இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்காய் சாப்ஸ், 30 வகையான வறுவல், 30 Type Varuval, போட்டு, Recipies, சமையல் செய்முறை