சேனைக்கிழங்கு வறுவல்
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு- தேவையான அளவு, கார்ன்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - ஒரு டீஸ்பூன்,பூண்டு - 6 பல், சின்ன வெங்காயம் - 5, மிளகு - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 2, தேங்காய் -ஒரு துண்டு.
செய்முறை: சேனைக்கிழங்கை ஒரு இன்ச் அளவு கனமுள்ள துண்டுகளாக நறுக்குங்கள். மஞ்சள்தூள்,உப்புப் போட்டு முக்கால் வேக்காடாக வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றை நன்குஅரைத்தெடுங்கள். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை கிழங்குடன் சேர்த்துப்பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கிழங்குகளைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேனைக்கிழங்கு வறுவல், 30 வகையான வறுவல், 30 Type Varuval, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை