அரைத்த மாங்காய் சாதம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,நெய் - 2 டீஸ்பூன்.வதக்கி அரைக்க: புளிப்பான மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3பல், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைவாகவோ அல்லது உதிராகவோவடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய்,மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி மாங்காய் துருவலை சேருங்கள். இதை 3நிமிடம் வதக்கி இறக்கி கரகரப்பாக அரைத்தெடுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில்சேருங்கள். இந்த கலவையை சாதத்துடன் கொட்டிக் கலந்து, கடைசியில் நெய் சேர்த்துபரிமாறுங்கள்.பிக்னிக் போன்ற பயணங்களுக்கு இந்தக் கட்டுசாதம் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ளதேங்காய் துவையல் சூப்பர் காம்பினேஷன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரைத்த மாங்காய் சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, டீஸ்பூன், வதக்கி, Recipies, சமையல் செய்முறை