காலிஃப்ளவர் ஊறுகாய் சாதம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் - ஒரு கப், மிளகாய்தூள் - ஒருடேபிள்ஸ்பூன், கடுகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - கால் கப்பிற்கும் சிறிதுஅதிகமாக, உப்பு - தேவை யான அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால்கப்.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு,மிளகாய்தூள், கடுகுத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு பிசறிவையுங்கள். ஒரு நாள் முழுவதும் இது ஊறட்டும். (எலுமிச்சம்பழச் சாறை, உங்களுக்குதேவையான புளிப்புச் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்). இதுதான் ஊறுகாய்.மறுநாள் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள் (குழைவாகவும் வடிக்கலாம்).சூடான சாதத்தில், ஊறிய காலிஃப்ளவர் ஊறுகாயைப் போட்டு நன்கு கிளறுங்கள். நெய்யில் கடுகுதாளித்துச் சேர்த்துக் கலந்துவிடுங்கள். பிரமாதமான சுவை தரும்.
குறிப்பு: இந்த காலிஃப்ளவர் ஊறுகாயை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்,அவசரத்துக்கு பிள்ளைகளுக்கு லன்ச் தயாரிக்க உதவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலிஃப்ளவர் ஊறுகாய் சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, உப்பு, எலுமிச்சம்பழச், காலிஃப்ளவர், Recipies, சமையல் செய்முறை