தால் பாத்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பூண்டைத் தோல்உரித்துக்கொள்ளுங்கள். அரிசி, பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச்சேர்த்து, குக்கரில் வைத்து மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்துஇறக்குங்கள். பிறகு, நெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். இந்த ‘பாத்’துக்குஅப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் நல்ல சைட்-டிஷ்.
குறிப்பு: சிறு குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் ஏற்றஎளிய டயட் இது. வாய்க்கு ருசியாக இருக்கும் இந்த சாதம், வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தால் பாத், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, , Recipies, சமையல் செய்முறை