சிம்பிள் வெஜ் ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காய்கறிகள் (பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட்,பீன்ஸ்) - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி-பூண்டு விழுது - ஒருடீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,சோம்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாகநறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்துவெங்காயம், கீறிய மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுதுசேர்த்து 2 நிமிடம் வதக்கி, காய்கறிகள் சேருங்கள். சிறிது உப்பு சேர்த்து, காய் நன்கு வேகும் வரைவதக்கி சாதம், நெய், சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்பிள் வெஜ் ரைஸ், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, உப்பு, சேர்த்து, சிறிது, Recipies, சமையல் செய்முறை