பூண்டு-வெங்காய சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல், உப்பு -தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, மிளகு - அரை டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தைதோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். மிளகாய், மிளகு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துபொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, சிறிது உப்புசேர்த்து, நன்கு வதக்குங்கள். இது நன்கு வதங்கியதும், மிளகாய், மிளகு தூளை தூவி நன்குகிளறுங்கள். பிறகு கறிவேப்பிலை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூண்டு-வெங்காய சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, நன்கு, மிளகு, மிளகாய், பூண்டு, Recipies, சமையல் செய்முறை