பட்டாணி மசாலா சாதம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பட்டாணி - கால் கப்.அரைக்க: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு- அரை டீஸ்பூன்.தாளிக்க: கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகஅரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம்வதக்கிய பின் சிறிது உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பிறகு தக்காளி,மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்குகலந்து பரிமாறுங்கள். குழந்தைகளின் லன்ச்சுக்கு செய்து அனுப்பினால், விருப்பமாகச்சாப்பிடுவார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டாணி மசாலா சாதம், 30 வகையான வெரைட்டி ரைஸ், 30 Type Varity Rice, சேர்த்து, உப்பு, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை