தக்காளி புலாவ்

தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், வெங்காயம் - 1,தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் - 2, புதினா - ஒரு கைப்பிடி, மல்லித்தழை - ஒருகைப்பிடி, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்பால் - அரைகப், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2டேபிள்ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தக்காளியைப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சைமிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரிசி, தேங்காய் பாலுடன், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள்.எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய்,சிட்டிகை உப்பு சேர்த்து, நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். வெங் காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போகவதக்குங்கள். பிறகு, ஊற வைத்த அரிசியை தண்ணீர், தேங்காய் பால் கலவையோடு சேர்த்துஊற்றுங்கள். மேலும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும்இறக்குங்கள்.குறிப்பு: நாட்டுத்தக்காளியாக இருந்தால் ஒரு தக்காளி குறைவாக சேர்க்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி புலாவ், 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, சேர்த்து, உப்பு, தக்காளி, Recipies, சமையல் செய்முறை