தக்காளி-சின்ன வெங்காய தொக்கு
தேவையானவை: பழுத்த தக்காளி - அரை கிலோ, சின்னவெங்காயம் - 150 கிராம், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,தனியாதூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 8 பல், புளி விழுது -ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு -தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - கால் கப்.
செய்முறை: தக்காளியை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக் கொள்ளுங்கள்.எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக பொரிந்ததும் அரைத்தவெங்காய விழுது, புளி விழுதை சேருங்கள். மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரைகிளறி, தக்காளி சாறு சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலைசேர்த்து சுருள வரும் வரை கிளறி இறக்குங்கள். சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!குறிப்பு: பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கியும் போடலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி-சின்ன வெங்காய தொக்கு, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை