முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான தக்காளி சமையல் » தக்காளி-பட்டாணி உருளைக்கிழங்கு பச்சடி
தக்காளி-பட்டாணி உருளைக்கிழங்கு பச்சடி
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், சின்னஉருளைக்கிழங்கு - 1, பட்டாணி - கால் கப், பெரியவெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2,மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு சிட்டிகை,எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: பருப்பைக் குழையாமல் வேக வையுங்கள். உருளைக்கிழங்கின் தோலைச் சீவிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள்.மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். வெந்த பருப்பில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பட்டாணி சேர்த்து வெந்ததும், புளியைக் கரைத்துஊற்றுங்கள். மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்த பின் தாளிக்கும் பொருட்களைத் தாளித்துஊற்றுங்கள். எல்லா டிபனுக்கும் ஏற்ற சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி-பட்டாணி உருளைக்கிழங்கு பச்சடி, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை