சிம்பிள் தக்காளி சட்னி
தேவையானவை: தக்காளி - 6, புளி - நெல்லிக்காய் அளவு,மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 12, பூண்டு(விருப்பப்பட்டால்) - 4, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒருடீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை -சிறிது.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, தக்காளி, புளி,உப்பு, மிளகாய்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் பச்சைவாசனை போக சுருள வதக்குங்கள்.பயணத்துக்கு ஏற்ற சட்னி இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்பிள் தக்காளி சட்னி, 30 வகையான தக்காளி சமையல், 30 Type Tomato Recipes, , Recipies, சமையல் செய்முறை