கோஸ் பீடா பஜ்ஜி
தேவையானவை: முட்டைகோஸ் இலைகள் - ஒரு கப், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால்கப், மிளகாய்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சமையல் சோடா (தேவையானால்) -சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை: கோஸ் இலையை நன்றாக சுத்தம் செய்து, நடு நரம்பை எடுத்துவிட்டு, நான்காக (பீடாமடிப்பது போல்) மடித்து, ஒரு கிராம்பை நடுவில் குத்தி விடவும்.கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா சேர்த்து, சிறிதுதண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மடித்த முட்டைகோஸ் பீடாக்களை இதில்தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சட்டென்று செய்யக்கூடிய, இன்ஸ்டன்ட் டிபன் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோஸ் பீடா பஜ்ஜி, 30 வகையான டிபன், 30 Type Tiffion, சிறிதளவு, Recipies, சமையல் செய்முறை