கல் தட்டை
தேவையானவை: அரிசிமாவு - ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், பொட்டுக்கடலை - 2டேபிள்ஸ்பூன், நிலக்கடலை (தோல் நீக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு- சுவைக்கேற்ப.
செய்முறை: எல்லாவற்றையும் நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். விருப்பப்பட்டால்சிறிது மிளகாய்தூள் சேர்க்கலாம். பிறகு, ஒரு துணியிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலோஎண்ணெய் தடவி, மெல்லிய தட்டைகளாக தட்டவும். இதை தோசைக்கல்லில் நான்கு, ஐந்தாகப்போட்டு, இருபுறமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிவக்கவிட்டு எடுக்கவும். ரொம்பவும்டேஸ்ட்டாக இருக்கும். வழக்கமாக தட்டையை எண்ணெயில்தான் பொரித்தெடுப்போம்.தோசைக்கல்லில் வேகவைப்பதால், இதன் சுவை புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.பாட்டி காலத்துப் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்தத் தட்டை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல் தட்டை, 30 வகையான டிபன், 30 Type Tiffion, , Recipies, சமையல் செய்முறை