வெண்டை உருளை மசாலா

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, உருளைக்கிழங்கு - 2,மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1டே.ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை -சிறிது.
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைத்து இரண்டாக நறுக்கி, விரல் நீளதுண்டுகளாக நறுக்குங்கள். உருளைக்கிழங்கை தோல் சீவி, விரல் நீள மெல்லியதுண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்துஉருளைக்கிழங்கை சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். 10நிமிடம் வதங்கியதும் வெண்டைக்காய், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், உப்புசேர்த்து நன்கு வதக்கி கடைசியில் எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்துகிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெண்டை உருளை மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை