ராஜ்மா மசாலா

தேவையானவை: ராஜ்மா - 1 கப், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 1டீஸ்பூன், கரம்மசாலா - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது,உப்பு - தேவைக்கு.அரைக்க: பெரிய வெங்காயம் - 3, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல். தனியேஅரைக்க: தக்காளி - 5. தாளிக்க: கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் - தலா கால்டீஸ்பூன், சோம்பு - சிட்டிகை, பட்டை - 1 துண்டு, எண்ணெய் - 3 - 4டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ராஜ்மாவை 8 முதல் 10 மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் உப்புசேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் நைஸாகஅரையுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து,அரைத்த விழுதைச் சேருங்கள். குறைந்த தீயில் பச்சை வாசனை போகவதக்குங்கள்.பின்னர் தக்காளியை அரைத்து அத்துடன் சேர்த்து, மிளகாய்தூள், தனியாதூள்,சீரகத்தூள் போட்டு, பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். பிறகு அதில்ராஜ்மா, மல்லி, சீரகத்தூள், உப்பு, சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். இந்தமசாலா இருந்தால் சப்பாத்தியும் பூரியும் பரோட்டாவும் அதிகம் இரண்டு சாப்பிடத்தோன்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராஜ்மா மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, சேர்த்து, சீரகத்தூள், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை