சேமியா பாத்
தேவையானவை: சேமியா - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பட்டாணி - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு,கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு.விழுதாக அரைக்க: பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பூண்டு - 5.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை: சேமியாவுடன் 2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து பிசறி ஒரு கடாயில் 2 நிமிடம் வறுத்து வையுங்கள்.மீதமுள்ள நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம்வதக்கி தக்காளி, பட்டாணி, அரைத்த விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனைபோனதும் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். அதில் சேமியாவை சேர்த்து பெரியதீயில் 2 நிமிடம் வேக விட்டு, தீயை குறைத்து மூடி போட்டு 6-8 நிமிடம் நன்கு வேக விட்டு மல்லித்தழை,கறிவேப்பிலை சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா பாத், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, டீஸ்பூன், சேர்த்து, நன்கு, நிமிடம், Recipies, சமையல் செய்முறை