கொத்தமல்லி சேமியா
தேவையானவை: சேமியா - 1 கப், மல்லித்தழை - 1 கட்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் -5, உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிகாய் அளவு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்,உப்பு - ருசிக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - 1டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள். 6 கப் தண்ணீரைகாய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேக விட்டு வடியுங்கள். எண்ணெயைக் காய வைத்துஉளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்தமல்லித்தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரையுங்கள். நெய்யை காய வைத்து, தாளிக்கும்பொருட்களைச் சேர்த்து, வறுத்து அரைத்த விழுதில் கொட்டுங்கள். இந்த விழுதுடன் உப்பையும் சேமியாவையும்கலந்து பரிமாறுங்கள். (குறிப்பு: எப்போதுமே சேமியாவை வேகவைக்கும்போது, தண்ணீர் நன்குகொதித்தபிறகுதான் சேமியாவைப் போடவேண்டும். அப்போதுதான் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் நன்குவேகும்).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தமல்லி சேமியா, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, டேபிள்ஸ்பூன், சேர்த்து, வைத்து, சேமியாவை, டீஸ்பூன், வறுத்து, Recipies, சமையல் செய்முறை