சேமியா காய்கறி கட்லெட்

தேவையானவை: சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீட்ரூட் - 1, பட்டாணி - கால் கப்,பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, புதினா - சிறிதளவு, மல்லித்தழை -சிறிதளவு, மைதா - அரை கப், பிரெட் தூள் - 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - பொரிக்க.
செய்முறை: சேமியாவை 3 கப் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கைவேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து பொடியாக நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர்துருவிய கேரட், பீட்ரூட்டையும், பட்டாணியையும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மசித்த உருளைக்கிழங்கு,சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்குங்கள்.இக்கலவையை வேண்டிய வடிவத்தில் செய்து 1 கப் தண்ணீரில் கரைத்த மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட்தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரியுங்கள். சூடாக சாஸுடன் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா காய்கறி கட்லெட், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை