சேமியா இட்லி
தேவையானவை: சேமியா - அரை கப், ரவை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஆப்ப சோடா -கால் டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் - 1 கப், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி -1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, நெய் -டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: சேமியா, ரவையை 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் தனித்தனியே வறுத்து ஒன்றாக கலந்துவையுங்கள். எண்ணெய், நெய்யை காய வைத்து, கடுகு முதல் முந்திரி வரை சேர்த்து வறுத்து, பின்னர்பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ரவை சேமியாகலவையில் சேருங்கள். அத்துடன் உப்பு, தேங்காய் துருவல், தயிர் (தேவையானால் சிறிது தண்ணீர்) சோடாஉப்பு சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள். இட்லி தட்டுகளில் அல்லது சிறிய கப்புகளில்ஊற்றி நன்கு வேக விட்டு எடுங்கள். வித்தியாசமான, சுவையான டிபன் இந்த சேமியா இட்லி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா இட்லி, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, டீஸ்பூன், இட்லி, சேர்த்து, எண்ணெய், சேமியா, சிறிது, Recipies, சமையல் செய்முறை