சேமியா சீஸ் கிரிஸ்பீஸ்
தேவையானவை: சேமியா - 1 கப், பனீர் - 200 கிராம், சீஸ் - 3 கட்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1 டேபிள்ஸ்பூன், மிளகுதூள் - 1 டீஸ்பூன், பூண்டு - 2 டீஸ்பூன், மைதா - அரை கப், கார்ன்ஃப்ளார் - கால்கப், பிரெட் தூள் - தேவையானது, எண்ணெய் - வறுக்க, உப்பு - தேவைக்கு.
செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்கு வேக விட்டு வடியுங்கள். சேமியாவுடன் துருவியபனீர், சீஸ், பச்சை மிளகாய், மிளகுதூள், பூண்டு, உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையுங்கள். இந்தக்கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். மைதாவுடன் 1 கப் தண்ணீர்சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள். சேமியா கிரிஸ்பீஸை அதில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி காயும்எண்ணெயில் வறுத்தெடுங்கள். சூடாக பரிமாறுங்கள். குழந்தைகளின் ஃபேவரிட் ஆகிவிடும் இந்த கிரிஸ்பீஸ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா சீஸ் கிரிஸ்பீஸ், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, நன்கு, Recipies, சமையல் செய்முறை