சேமியா மஞ்சூரியன் பால்ஸ்

தேவையானவை: சேமியா - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பெரியவெங்காயம் - 1, கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, ஆரஞ்சு ரெட் கலர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு, வெந்ததும் வடித்து வைத்துக்கொள்ளுங்கள். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாகமற்றவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக பிசைந்து, சிறு சிறுஉருண்டைகளாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான ருசியில் மஞ்சூரியன் பால்ஸ்தயார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா மஞ்சூரியன் பால்ஸ், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, , Recipies, சமையல் செய்முறை