சேமியா பிரதமன்
தேவையானவை: சேமியா - 1 கப், பாசிப்பருப்பு - அரை டீஸ்பூன், வெல்லம் - இரண்டரை கப், தேங்காய்ப்பால் - 1 கப், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் - 2டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை சேருங்கள்.2 நிமிடம் பெரிய தீயில் வைத்து, பிறகு தீயைக் குறைத்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தில் கால் கப் தண்ணீர்சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரையவிடுங்கள். கொதித்ததும் வடிகட்டி பாசிப்பருப்புடன் சேமியாவில்சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.அத்துடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்தூள் சேருங்கள். நெய்யைக் காயவைத்து தேங்காயை சிவக்க வறுத்துசேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா பிரதமன், 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, வைத்து, Recipies, சமையல் செய்முறை