சேமியா உப்புமா
தேவையானவை: சேமியா - 2 கப், பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது,உப்பு - தேவைக்கு.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு,பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி, 3 கப் தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில்வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு இறக்குங்கள். சூடாகப்பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா உப்புமா, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, நிமிடம், நன்கு, சேர்த்து, இஞ்சி, டீஸ்பூன், உப்பு, Recipies, சமையல் செய்முறை