தக்காளி சேமியா
தேவையானவை: சேமியா - 1 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 4, மிளகாய்தூள்- 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை- சிறிது, உப்பு - ருசிக்கு.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விட்டு வடியுங்கள். வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். அத்துடன் நறுக்கியவெங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் தக்காளி, இஞ்சி - பூண்டுவிழுது, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்குங்கள். அதில் சேமியா, மல்லித்தழை,கறிவேப்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி சேமியா, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, டீஸ்பூன், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை