சேமியா புளியோதரை
தேவையானவை: சேமியா - 1 கப், சன்னா - கால் கப், புளி கரைசல் - முக்கால் கப், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கு, நல்லெண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -4, முந்திரிப்பருப்பு - 6.பொடிக்க: காய்ந்த மிளகாய் - 7, தனியா - 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எள் - 1டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற விட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக விட்டுவடியுங்கள். சேமியாவை 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து, 6 கப் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள்.பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறு தீயில் நன்கு வறுத்து பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்துதாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை சிவந்ததும் புளி கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,உப்பு, சன்னா சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். கடைசியில் சேமியா, அரைத்த மசாலாதூள்சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியா புளியோதரை, 30 வகையான சேமியா உணவுகள், 30 Type Semiya, டீஸ்பூன், டேபிள்ஸ்பூன், சேர்த்து, உப்பு, Recipies, சமையல் செய்முறை