புதினா ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு (இரண்டும் சேர்ந்து) - கால் கப், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எலுமிச்சம்பழம் - பாதி, தக்காளி - 1, உப்பு - ஒருடீஸ்பூன், புதினா இலை - கால் கப். ரசப்பொடிக்கு: உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன். தாளிக்க:எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து, பொடித்துவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கால் டீஸ்பூன்மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி, அரைகப் தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில்சேர்த்து, உப்பையும் போடவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியைப் போட்டு வேகவைத்துள்ள பருப்பையும் சேர்க்கவும். புதினாவை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டுவதக்கி அதில் போட்டு கொதித்ததும் இறக்கி கடுகு, சீரகம் தாளிக்கவும். கடைசியாகஎலுமிச்சம்பழத்தைப் பிழியவும். இந்த ரசம் ஜீரணத்துக்கு நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதினா ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, கால், டீஸ்பூன், எண்ணெய், Recipies, சமையல் செய்முறை