மிளகு ரசம்
தேவையானவை: புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன். ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரைடீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிது. தாளிக்க: நெய் - கால் டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: ரசப்பொடிக்கென கொடுத்துள்ளவற்றைப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப்நீர்விட்டு அதில் உப்பு, புளி இரண்டையும் போடவும். பிறகு பெருங்காயத்தூளை சேர்க்கவும்.கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் பொடித்து வைத்துள்ள ரசப்பொடியை போட்டு கொதித்து மேலேவந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும். உடம்பு வலிக்குமிகவும் ஏற்ற ரசம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிளகு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை