முருங்கை ஈர்க்கு ரசம்
தேவையானவை: தக்காளி - 1, புளி - கொட்டைப்பாக்கு அளவு, முருங்கைக் குச்சி (சற்றுநீளமானதாக) - 10, உப்பு - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - ஒரு கொத்து, எண்ணெய் - கால்டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற எல்லாவற்றையும்வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்த பிறகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலைஇரண்டையும் போட்டு சூடு ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர்விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும். முருங்கைக் குச்சிகளை அதில் போட்டு உப்பு, பெருங்காயம்சேர்த்து வேக விடவும். தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ரசப்பொடியைப் போட்டு, ரசம்கொதித்தவுடன் வேக வைத்த பருப்பை ஊற்றி, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துகொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முருங்கை ஈர்க்கு ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கறிவேப்பிலை, கொள்ளவும், போட்டு, எண்ணெய், துருவல், கால், தேங்காய், Recipies, சமையல் செய்முறை