தேங்காய்ப்பால் ரசம்

தேவையானவை: தக்காளி - 1, உப்பு - முக்கால் டீஸ்பூன், தேங்காய் - 1, பச்சை மிளகாய் - 3,கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால்டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி 2முறை பால் (முதல் பால், இரண்டாம் பால்) எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை உப்பு, சீரகம்சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நீர்த்த பாலில் தக்காளியைப் போட்டு ஒரு கொதி வந்ததும்,அரைத்த மிளகாயை அதில் சேர்க்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளையும் போடவும்.கடைசியாக கெட்டியான முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி, தேங்காய் எண்ணெயைஊற்றவும். பிறகு எலுமிச்சம்பழச் சாறை விடவும். தோசைக்கும்கூட இதைத் தொட்டுக் கொள்ளலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய்ப்பால் ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, பால், கொள்ளவும், தேங்காய், டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை