சீரக ரசம்
தேவையானவை: புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். ரசப்பொடிக்கு: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் -ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன். தாளிக்க:நெய் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: எண்ணெயில் துவரம்பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து கடைசியாகசீரகத்தைப் போட்டு இறக்கி பொடி செய்யவும். புளியை இரண்டு கப் நீர்விட்டு நன்றாகக் கரைத்துவடிகட்டி உப்பு போட்டு கொதிக்க விட்டு, பிறகு மஞ்சள்தூள், ரசப்பொடி இரண்டையும் போட்டுகொதித்ததும் நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீரக ரசம், 30 வகையான ரசம், 30 Type Rasam, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை