கொத்தவரங்காய் பொரியல் - 2
தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, தேங்காய் துருவல் - கால் மூடி, வரமிளகாய் -2, சீரகம் - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை, உப்பு - எல்லாம் தலா தேவையான அளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கொத்தவரங்காயை இரண்டாக (விரல் நீளத்திற்கு) நறுக்கிக் கொள்ளவும். சின்னக்காயாக இருந்தால் நுனியை ஆய்ந்து விட்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம். லேசாக வதக்கி,குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு பெரிய வெங்காயத்தை தேங்காய், மிளகாய்,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்த வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் தாளிதம் போட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, காயையும் போட்டுப்பிரட்டி, அரைத்த மசால் சேர்த்து வதக்கி இறக்கவும். பிரியப்பட்டால் மல்லி இலை சேர்க்கலாம்.குறிப்பு: சாதம் மட்டுமல்ல, சப்பாத்தியுடனும் துணை போகும் சைட் டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொத்தவரங்காய் பொரியல் - 2, 30 வகையான பொரியல், 30 Type Poriyal, வெங்காயத்தை, வதக்கி, Recipies, சமையல் செய்முறை