முருங்கைக்காய் பொரியல்
தேவையானவை: முருங்கைக்காய் - 4, கத்திரிக்காய் - 150 கிராம், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு.
செய்முறை: கத்திரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் திட்டமாகத்தண்ணீர் வைத்து முருங்கைக்காய் துண்டுகளை வேகவிடவும். 5 நிமிடம் கழித்து, கத்திரிக்காய்துண்டுகளையும் சேர்க்கவும். வெந்ததும் உப்புப் போட்டு இறக்கி, ஒரு கொதி கொதிக்க விட்டுதண்ணீரை வடிக்கவும். வாணலியில் தாளிதம் செய்து, காய்களை வதக்கவும். காய் வதங்கியதும்உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, மல்லித்தழை சேர்க்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முருங்கைக்காய் பொரியல், 30 வகையான பொரியல், 30 Type Poriyal, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை